அதற்கு technical காரணங்கள் பல கூறப்பட்டாலும், மிக முக்கிய வரலாற்று காரணம் ஒன்று உள்ளது. "கட்டை விரல்' கொண்டு வில் வித்தையில் ஈடுபடுவது பொதுவாக Eastern countriesல் பின்பற்றப்பட்ட முறை". அதனாலேயே இந்த முறையை Western Countries ஏற்கவில்லை. Technical reason என்கிற பெயரில் பல இளக்கார காரணங்கள் கூறப்பட்டது. அவையெல்லாம் விளையாட்டு போட்டிகளில் எழுதப்படப் போகும் மோசமான அரசியல் வரலாற்று காரணங்கள்.
வில் வித்தை மட்டுமல்ல பல்வேறு போட்டிகளிலும் மேற்கத்திய நாடுகள் செய்த தந்திரங்களே ஆட்ட விதிகளாக வரையறுக்கப்பட்டன. ஆனாலும் கூட அதன் வழியாகவே வில் வித்தையில் இன்றும் கோலோச்சுவது Eastern Countries தான்.
வில் வித்தையில் "கட்டை விரலை" பயன்படுத்துவது ஒரு போர் முறை. ஓடிக்கொண்டோ, விலங்குகள் மீது அமர்ந்தோ, மரத்தில் தொங்கியபடியோ என Multi Taskingல் பயன்படுத்த ஏதுவானதாகவும், இயக்கத்தில் இருக்கும் போதே அதிக சேதத்தை உண்டாக்கும் துல்லிய தாக்குதல்களுக்கும் ஏதுவானது.
ஆனால் வில் வித்தை போட்டிகளில் இது Single Task. அப்படியும் கூட தற்போதைய போட்டி முறைகளில் Release Trigger உடைய key "கட்டை விரலில்" தான் உள்ளது.
அம்பெய்தும் கை அல்லாமல் வில் பிடிக்கும் கை, வில்லை குறி நோக்கி நிலைநிறுத்தவும், எய்தும் போது குறி பிசகாமல் இறுகப்பிடிக்கவும் கூட "கட்டை விரல்" தான் முதன்மையானது, முக்கியமானது. பாரா ஒலிம்பிக்கில் கால்களினால் வில் வித்தை செய்யும் போது கூட கால் "கட்டை விரலே" வில்லை தாங்கி நிற்கிறது.
"கட்டை விரலை" வைத்து அரிய வகை ஆய்வுகளை செய்த சிலர், அதை கேட்டவனை விட்டுவிட்டு, கேட்டால் உதைப்போம் என்றவரை வன்மத்தோட வசைபாடுகின்றனர். கட்டை விரல் இல்லை காணிக்கையாய் எந்த விரலை கேட்டிருந்தாலும்!
"பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்" என்று தான் "அவர்" சொல்லியிருப்பார்.