உலகக் கிரிக்கெட் வெறியர்களாலும், இனவெறியர்களாலும், உருவக்கேலியாலும் தொடர்ந்து சீண்டப்பட்டு வரும் பவுமா தன்னுடைய கேப்டன்சி மற்றும் பேட்டிங் திறமையால் பேசியவர்கள் வாயை எல்லாம் அடைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2 சதம் உட்பட 609 ரன்களைக் குவித்த பவுமா, டெஸ்ட் கேப்டனாகத் தோல்வியே சந்திக்காமல் தொடர் வெற்றிகளைத் தன்வசமாக்கியுள்ளார்.
1998க்குப்பின், அதாவது 27 வருடங்களுக்குப் பிறகு ஐசிசி சாம்பியன் பட்டத்தை SAவுக்கு வென்று கொடுத்துள்ளார் பவுமா . 2011 world cupஐ தோணி வென்று கொடுத்த மாதிரி. இதுவும் SA வெற்றியை இந்தியா கொண்டாட மற்றுமொரு காரணம்.
இதுமட்டுமே பவுமாவை கொண்டாட காரணமா என்றால்? இல்லை. இதுவும் முக்கியக் காரணம். இதைவிடப் பவுமாவின் வெற்றியை தமிழ்நாடு personalஆக எடுத்துக்கொள்ளவும், நெருக்கமாக்கியதற்கும் மற்றொரு காரணம்...,
தமிழ்நாடு எப்போதும் தனிமனித தாக்குதலுக்கும், இன,நிற,மொழி,மதவெறி என அடிப்படைவாதங்களுக்கும் எதிரானது. இதனை தனியொருவனாய் எதிர்கொண்டு வென்று நிற்கும் பவுமாவை தமிழ்நாடு எப்படிக் கொண்டாடாமல் போகும்.?
கருப்பு இன மக்கள் அதிகமாக வாழும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் காரணமாகக் கருப்பின வீரர்களுக்குக் கிரிக்கெட் அணியில் இடம்பெற பல தடைகள் இருந்தது.
இதை எதிர்த்த மண்டேலா உள்ளிட்ட தலைவர்களின் புரட்சித்தீயினால் தான் SA கிரிக்கெட் அணியில் கருப்பு இன வீரர்களுக்காக இட ஒதுக்கீடு கொள்கை வகுக்கப்பட்டது.
இடஒதுக்கீடு என்னும் சமூகநீதி கொள்கையால் கிரிக்கெட் உலகிற்குள் வந்த பவுமாவை தமிழ்நாடு பாகுபலியாகத் தானே பார்க்கும்.
இட ஒதுக்கீட்டால் கருப்பு இனத்தில் இருந்து வந்தவர்கள் கிரிக்கெட்டை மட்டும் வெல்லவில்லை. ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க நாட்டையுமே வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஒற்றுமையும், ஒருங்கிணைந்த வளர்ச்சியும் நாட்டை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் சிறந்த வழி என பாடம் எடுத்துள்ளார் பவுமா.
Inclusive growth என்பது பொருளாதார ரீதியாக மட்டும் வளர்த்தெடுப்பது இல்லை. சமூக ரீதியாகவும் வளர்த்தெடுப்பது.
திறமை பலதரப்பட்ட மக்களுக்குள் எவருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இடஒதுக்கீடு திறமையை நிராகரிக்கும் காரணி அல்ல. அனைத்து தரப்பு மக்களும் நாட்டின் பொது வளர்ச்சியில் பங்கெடுக்கச் செய்யும் மிக முக்கிய, உயரிய காரணி.
விளையாட்டிலும் நிலைநாட்டப்பட்ட சமூகநீதியால் பவுமா பெற்றுக்கொடுத்த வெற்றியை தமிழ்நாடு இப்படித் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை என்றால் தானே ஆச்சரியம்.!