அது ஒரு கோடை பொழுதின் உச்சி வெயில் நேரம். இரண்டரை நிமிட தொலைபேசி உரையாடலில் ஒட்டுமொத்த வெப்பமும் மார்கழி மாத வெண்பனி போல் எதிர்ப்பட்ட அனைத்தையும் மறைத்தது.
இதுவரை என்னாத அல்லது உணராத ஒரு புதுமையான புரிதலது. புதிதாக பள்ளி செல்லும் குழந்தை எப்படி வீட்டை , சுற்றத்தை மீறி அதனால் இன்னொரு வேறுபட்ட சூழ்நிலைக்குள் செல்ல முடியாமல் தவிக்குமோ ! அதுபோன்றதொரு தவிப்பு . இதுவரை இல்லாத அல்லது தெரியாத ஒரு உறவுக்குள் சிக்கும் மிக சாதாரணமான ஆனால் அசாத்தியப்பட்ட எண்ணமது , தற்போது அதை என்னும் போதும் சற்றே மயிர்க்கூச்செறியும் நினைவது. பார்க்கும் யாவற்றையும் புதிதாக அனுபவிக்க வைத்த நேரமது.
வீசிய அந்த கடும் வெயிலும் வெப்பக்காற்றும் அவ்வளவு குளிரை அதுவரை தந்ததில்லை .
பெரிதாய் பழக்கப்படாத நம்பிக்கையற்ற ஒருவனாக இருந்து திடீரென ஓர் உயிர் அதன் உணர்வு ரத்தமும் சதையுமாக எனை சூழ அந்த அற்புதமான தருணத்தை கடக்க இதுவரை இல்லாத அளவிற்கு காலம் தேவைப்பட்டது . ஒருபோதும் மரங்கள் கதைத்து நான் கண்டதில்லை ,
காற்று இசைத்தும் கேட்டதில்லை ...
அதுவரை என் வார்த்தைகள் கோர்வையாய் வந்ததில்லை ,
அடித்து போட்டாற் போல் உறங்கி எழுந்தபின் , அந்த சோம்பலை முறிப்பது போல் அவ்வளவு இனிமையாக ஒரு உணர்வை நான் அனுபவித்ததில்லை, அவ்வுணர்வையும் அதை உண்டாக்கியவளையும் நோக்கி நெருங்கையில் !, வண்டின் முரல் கூட குறுக்கிடாத அந்நேரத்தில் ஒருபக்க கண்ணாடி உடைந்து, ஆற்று மணலை சுமந்து பின்னால் வருபவர்கள் கண்ணில் வாரித்தூவி சென்ற அந்த லாரி , பேருந்திற்கு அருகே சட்டென அதன் இரும்புகரைத்த குரலில் அலரி ,
என் புதியதொரு அனுபவிக்க இயலாத அனுபவத்தை கலைத்து விட்டு சென்று விட்டது . ஆனால் அதன்பின்னும் அந்த ஜன்னலோரம் எனக்கு குறைவைத்துவிடவில்லை,
என் நெருங்கியவரும், எனை அதிகம் அலைகழித்தவருமான சுஜாதா எனதருகில்...,
ஜன்னலோரமா ? அவரின் ஆள்காட்டி விரலோரமா ? இருதலைகொள்ளி எறும்பாய்.,சட்டென மனம் அந்த விரலோரமே ஐக்கியமானது.
பேருந்துக்குள் அறுபதில் இருவராய் நானும் அவரும் ,
மனதுக்குள்"ஆயிரத்தில் இருவராய் " அவளும் நானும் ,
ஆற்றிலும் இல்லை , குளத்திலும் இல்லை , ஏன் கடல்லயே இல்லையாம் ! ஆனாலும் மூழ்கி கொண்டிருந்தேன் !
இருபத்தோராவது பக்கம் தாண்டுவதற்க்குள் இல்லாத ஆனால் வாழ்வோட வரவிருக்கும் அவளின் முகம் தெரியா உருவம் காற்றிலே மிதந்து அந்த புத்தகத்துக்கும் என் விழிகளுக்கும் இடையில் தன்னைத்தானே வரைந்துகொண்டிருந்தது ,
வரதட்சணை கூத்தெல்லாம் மனிதர்களுக்கானது, மனத்திற்க்கும், உணர்விற்க்குமானது அல்ல என்ற தெளிவுடன் தொடர்ந்தது பயணமும் , மீதமிருந்த 59 பக்க வாசிப்பும் ....
No comments:
Post a Comment