புத்தக வாசிப்பும், விற்பனையும் குறைந்து வருவதாகப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் பேசாத மேடை இல்லை. Kindle, Pdf, E-book Apps, Subscription Services வருகைக்குப் பின் புத்தக விற்பனை சரியத் தொடங்கியது.
புத்தகங்களை நவீனமாக எதிர்பார்க்கின்றனர் இளம் தலைமுறையினர்.
2016ல் எடுக்கப்பட்ட National Youth Readership Survey அதற்கு முன்னான 2 தசாப்தங்களை விட 2016ல் புத்தக வாசிப்பும், விற்பனையும் குறைந்து வருவதாகத் தெரிவித்தது. இது அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 10% வரை குறைந்ததாகத் தெரிவித்தது.
2007-2012 kindle peakல் இருந்த காலம். அமேசானே இந்தியாவை நம்பித்தான் இருந்தது. 2014க்கு பிறகு Smart phones, tablet சந்தை வருகைக்குப் பின் kindle ஓரங்கட்டப்பட்டது. குறைந்த விலையில் கிடைப்பதால் அதன் பயன்பாடு அதிகரித்தது. Audiobook, podcast வசதியென Multi purpose usageஆக இருப்பதால் அதனை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர்.
சரி புத்தகத்திற்கு வருவோம், பதிப்பிடப்படும் புத்தகங்களின் விவரங்களே இல்லாத ஒரே கடை நம்ம பதிப்பக கடைகள் தான். எந்த வெளிப்படைத்தன்மையும் பதிப்பகங்களுக்குள் இல்லை.
அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களை வெவ்வேறு அட்டைப்படம், பெயர் வைத்துப் பதிப்பித்து விடுவார்கள். அதுவும் தொ.பா இவர்களிடம் மாட்டிக்கொண்டு பட்டபாடு இருக்கே! புத்தக வாசகர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வாசிப்பு குறைந்துவிட்டது, விற்பனை சரிந்துவிட்டது என பழியை தூக்கி வாசகர்கள் மீது போட்டுவிட்டுப் புலம்பித்தீர்த்தார்கள் பதிப்பகர்களும், சில அறிவுஜீவி எழுத்தாளர்களும்.
இந்தக் காலக்கட்டத்தில் தான் திமுக செயல் தலைவர் திரு. M. K. Stalin 2017ம் ஆண்டு ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டார். தன்னை சந்திக்க வரும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் - பரிசுகள், சால்வைகள், பூங்கொத்துகளுக்கு பதிலாகப் புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அன்று தொடங்கி அவருக்கு வழங்கப்பட்ட இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பொது நூலகங்களுக்கு வழங்கியுள்ளதாக உலக புத்தக தினத்தன்று(23 ஏப்ரல் 24) வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பாக 234 தொகுதிகளிலும் நூலகங்களைத் தொடங்கப்போவதாகத் திரு. Udhayanidhi Stalin கூறியிருந்தார். அவருக்கு இதுவரை வழங்கப்பட்ட ஏறத்தாழ 25,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை அந்த நூலகங்களுக்கு வழங்கியுள்ளதாகத் திமுக இளைஞரணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதலபாதாளத்தில் கிடந்த புத்தக விற்பனையை உயிர்பித்திருக்கிறது இந்த முன்னெடுப்பு. இதையே மற்ற கட்சிகளும் பின்பற்றினால் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தலாம். பதிப்பகத்துறையையும் செம்மையாக்கலாம்.
ஆனால் புத்தக வாசிப்பை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டிய பதிப்பகத்துறை, அதற்கான எந்தவித முயற்சியும் செய்யாமல் புத்தகங்கள் விற்பனை குறைந்துவிட்டது என “16 வயதினிலே கமல்” கணக்காகத் தேய்ந்த ரெக்கார்டையே பேசிக்கொண்டிருப்பார்கள். குறிப்பிட்ட பிரிவினிரிடம் மட்டுமே பதிப்பகங்கள் இருப்பதும், இதற்கெல்லாம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.
புத்தகத் திருவிழாவிற்கு வரும் வாசகரையே இவர்கள் மதிப்பது கிடையாது. ஆனால் வாசகர்கள் மீது குறைப்பட்டுக் கொள்வார்கள். வருடா வருடம் - கழிப்பறை சுகாதாரமாக இல்லை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை, மழை பெய்து தண்ணீர் தேங்கும் இடங்களைச் சரிசெய்யக் கூட ஏற்பாடுகள் செய்யமாட்டார்கள் என குறைகள் மட்டும் நிறைந்திருக்கும்.
உணவு பண்டங்களின் விலை Mallகளில் விற்கும் அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் ஏற்பாடுகள் மலுமட்டைத் தனமாக இருக்கும். உணவு விலை அதிகமாக இருப்பதிலேயே தெரிந்துவிடும், இவர்கள் கொடுக்கும் tender லட்சணம்.
இத்தனைக்கும் தமிழ்நாடு அரசு ஏகபோகமான நிதியுதவியையும் செய்கிறது.
புதிதாகச் செய்கிறார்கள் என்றால் கூடப் பரவாயில்லை. 47 வருடமாகக் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள், எப்போது கற்றுக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. இந்த வருட புத்தகத் திருவிழாவையாது இத்தனை வருட தொடர் குறைகளைச் சரிசெய்து தொடங்குகிறார்களா என்று பார்ப்போம். 
இதுபோன்ற குறைகளை எல்லாம் ஒருவேளை சரிசெய்து விட்டால், வாசகர்களை எப்படி புத்தகம் வாங்க வைக்க முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு வந்துவிடும்.
No comments:
Post a Comment