கலைஞர் கோட்டம் வள்ளுவர் கோட்டம் போல் தான் உள்ளது !
ஆனால் வள்ளுவர் கோட்டத்தையே ஆழித்தேர் வடிவில் தான் அமைத்திருந்தார் கலைஞர்.
கன்னியாக்குமரில விவேகானந்தர் பாறை திறக்கப்பட்ட அடுத்த 7 மாசத்துல வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் கலைஞர்.
கன்னியாக்குமரியில விவேகானந்தர் பாறை உருவாக தொடங்கியது 1963 காங்கிரஸ் அரசு ஆட்சியில. விவேகானந்தரோட நூற்றாண்டை சிறப்பிக்க ஒன்றிய அரசு எடுத்த இந்த முடிவுக்கும், அதையும் தென்கோடியான குமரியில அமைக்குறதுக்கும் காங்கிரஸ்ல இருந்த சர்தார் படேலின் வழிதோன்றிய ஆர்எஸ்எஸ் அபிமானிகளும் ஒரு காரணம். அதுக்கு 1008 லாஜிக் காரணங்களும் சொல்லப்பட்டது.
1962ல தொடங்கி 1972 செப்டம்பர்ல "காங்கிரஸ்" ஆட்சியில ஆர்எஸ்எஸ்ஸோட ஏக்நாத் ரானடே மூலமா விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுச்சு. 1973 ஏப்ரல்ல சென்னைக் கோடம்பாக்கத்துல கலைஞர் தலைமையில வள்ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1976ல கட்டிமுடிக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவுக்கு 7 நாள் முன்னாடி திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால அதை அப்போதைய குடியரசுத்தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது திறந்து வச்சாரு.
1973ல ஆரம்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்ட கட்டமைப்பை ஆழித்தேர் வடிவத்துல உருவாக்குறதுக்கு 3 வருசத்துக்கு முன்ன அதாவது 1970ல தான் இரண்டு தசாப்தமா ஓடாம கிடந்த ஆழித்தேரை ஓடவிட்டு சமத்துவ வடம் பிடிக்க வச்சாரு கலைஞர். இதே காலக்கட்டத்துல தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அறநிலையத்துறைக்கு தனி அமைச்சகம்லாம் அமைச்சாரு.
வள்ளுவர் கோட்டத்தை கட்டி அவரோடைய சிறப்புகளையும், புகழையும் எப்படி உலகறிய எடுத்து சொல்ல முடிஞ்சுதோ, அதேபோல இந்த பக்கத்துக்கு தேவையான ஆன்மீக வழி ஆயுதத்தையும் உருவாக்கி வச்சிருந்தாரு கலைஞர். ஆன்மிகத்தை கொண்டே அதன் மத துவேச அரசியலை வீழ்த்துறது தான் அதோட வேலை.
விவேகானந்தர் மண்டபத்துக்கு பக்கத்துலயே வள்ளுவர் சிலையை இந்திய ஒன்றியத்தோட தென்கோடி முனையில நிற்க வைக்க நினைச்சாரு கலைஞர். அதுக்காக தேசிய கட்சிகள் ஆண்டாண்டு காலமா ஆடிட்டு இருந்த ஆட்டத்தை அசால்ட்டா பீச்சாங்கையிலயே ஆடி ஜெயிச்சாரு கலைஞர். விவேகானந்தர் மண்டபத்தை கட்டுறதுக்கு காரணமா இருந்த அதே ஆர்எஸ்எஸ் ரானடே மூலமாவே சிலை வைக்குற திட்டத்தை 1975ல அறிவிச்சாரு. இந்த திட்டத்துக்கு 1979ல "ஜனதா தள" ஆட்சியில மொரார்ஜி தேசாய் தலைமையில அடிக்கல் நாட்டப்பட்டுச்சு. ஆனா அதுக்கப்பறம் அது பல சிக்கல்களை சந்திச்சு 1990ல தொடங்கி 2000 ஜனவரி 1ல கட்டி முடிக்கப்பட்டு திறக்கவும்பட்டுச்சு.
வள்ளுவர் கோட்டம் - ஆழித்தேர் வடிவம் - வள்ளுவர் சிலை எல்லாமே ஆன்மீக வழி மத துவேச அரசியலுக்கு எதிரான கலைஞரோட ஆயுதங்கள் தான். அவரோட ஆயுதங்கள் எல்லாத்தையும் அவருடைய எதிரிகள் தான் தேர்ந்தெடுத்தாங்க.
The Real "அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது".
கலைஞரோட மக்கள் நலத்திட்டங்கள் மட்டும் இல்ல, அவர் எடுத்து வைக்குற ஒத்த செங்கல்லும் கூட வரலாற்றை எழுதுறதுக்கும், திருத்துறதுக்குமானதா தான் இருந்திருக்கு. அவரோட மிக எளிதான அத்தனை நகர்வுலையும் நாம நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அரசியல் நிலைப்பாடு இருந்திருக்கு. மூளை முழுக்க ஒருத்தரால எப்படி மக்கள், அவர்களோட அரசியல், பொருளாதாரம், உரிமைகள், நலன் பற்றியே சிந்திக்க முடிஞ்சுது ? அவரை alpha maleனு தனியாலாம் அடையாளப்படுத்த வேணாம். alphaக்குலாம் alpha அவரு. So simply said அவரு கலைஞர். அவ்ளோதான்.
The only one super one raaaa அந்தாளு🖤.
No comments:
Post a Comment