Bangaloreல IT sectorsக்கு WFH suggest பண்ணிருக்காங்க, அத்தியாவசிய தேவையை தவிர வேற எதுக்காவது தண்ணீர் பயன்படுத்துனா 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுது. அடுக்குமாடி குடியிருப்புகள்ல தண்ணீர் பயன்படுத்தப்படுறதுக்கு அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கு. சில குடியிருப்புகள்ல direct waterpipe connectionல தண்ணி விடாம ஒரே இடத்துல வந்து வாளியில பிடிச்சிட்டு போக சொல்ட்ற அளவுக்கு நிலைமை தீவிரமா இருக்கு.
இதுக்கெல்லாம் தீர்வா அந்த மாநிலத்துல நிலவுற ஒற்றை கருத்து காவிரியில இன்னொரு அணை கட்றது. அணை கட்டிட்டா தீர்வு கிடைச்சிடும்னு அவங்க நம்புறாங்க. ஆனா அப்படி கண்டிப்பா நடக்காது. ஏன்னா அங்க இருக்குற அணைகள் மழை காலத்துல நிரம்பி இருந்தாலும் இப்போ அதோட நீர்மட்ட அளவு 30% குறைவா இருக்கு. இன்னொரு அணை கட்டினா மழை காலத்துல இன்னும் கொஞ்சம் அதிகமா நீரை தேக்க முடியுமே தவிர பிரச்னையை முழுமையா தீர்க்க முடியாது.
அங்கு குடிநீர் வழங்கல் வாரியம் அதிகமா இருக்கு. ஆனா Combined குடிநீர் திட்டங்களா அதை செயல்படுத்துறதுல தெளிவும், போதாமையும் இருக்கு. பெங்களூர் நகரத்துக்கு பல்வேறு கட்டங்களாக அதிகமான குடிநீரை கொண்டு போன கர்நாடக அரசு, அந்த நகரத்தை சுத்தியிருக்குற சிறு நகரங்கள், கிராமங்களை கவனிக்கவும், இணைக்கவும் தவறிட்டு. நீர் விநியோகம் பெங்களூரை மையப்படுத்தினதால சுத்தியிருக்குற பகுதிகள்ல ஆழ்துளை கிணறுகளையே நம்பி இருக்க வேண்டியதாவும், அதையே முழுமையா பயன்படுத்த வேண்டியதாவும் இருக்கு. இதனால மழை காலம் தவிர்த்த மற்ற காலங்கள்ல நடுவுல இருக்க பெங்களூரால அதோட நிலத்தடி நீரை தக்க வைக்க முடியாம, கடும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய சூழலுக்கு போயிடுது.
இதை சமாளிக்க கர்நாடக அரசு முதன்மையா செய்ய வேண்டியது மாநிலம் முழுக்க கூட்டு குடிநீர் திட்டங்களை அதிதீவிரமா செயல்படுத்த வேண்டியது. தவிர இன்னொரு அணையை கட்றது இல்ல.
தமிழ்நாட்ல மொத்தம் "523 கூட்டு குடிநீர் திட்டங்கள்" செயல்பாட்ல இருக்கு. இதை 1971லயே சாத்தியப்படுத்தினாரு கலைஞர். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரியை சாத்தியப்படுத்தினதை எப்படி இந்தியாவே ஆச்சரியமா பாக்குதோ, அதேபோல மாவட்டத்துக்கு மாவட்டம் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததும் அந்தளவுக்கு ஆச்சரியத்துக்கு உரியது தான். தண்ணீர் பற்றாக்குறை அதிகமா நிலவுன சென்னைக்கும், தென் மாவட்டங்களுக்கு மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாம். அப்படி பண்ணியிருந்தா இன்னைக்கு பெங்களூருக்கு வந்த நிலைமை என்னைக்கோ நமக்கு வந்திருக்கும். இத்தனைக்கும் காவிரி தான் இந்த திட்டங்களுக்கு முதன்மையான நீராதாரம்.
நீதிமன்றம், காவிரி ஆணையம்னு யார் சொன்னாலும் சொற்ப அளவுல வர தண்ணீரை வச்சே தமிழ்நாட்டோட பெரும்பான்மையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியது. காவிரி உற்பத்தியாகுற இடத்தை வச்சிக்கிட்டு தண்ணீர் பற்றாக்குறை என்பது திட்டங்களில் தொலைநோக்கு பார்வை இல்லாததை மட்டும் தான் காட்டுகிறது. குடிநீர் விநியோகத்துல கர்நாடகா okவா தான் இருக்கு. ஆனா கூட்டு குடிநீர் திட்டத்துல ரொம்ப மோசமான நிலையில இருக்கு. இதை தீர்க்க ஒரே வழி "கலைஞரோட கூட்டு குடிநீர் திட்டத்தை" அப்படியே அங்க செயல்படுத்துறது தான்.
அப்பறம் தமிழ்நாட்ல இருந்துட்டு ஏன் அணை கட்டலனு கேட்குறதை விட்டுட்டு , முக்குக்கு முக்கு அணையை கட்டி வச்சிருக்க கர்நாடகவுல ஏன் இவ்ளோ தண்ணீர் பற்றாக்குறை வந்துச்சுனு யோசிங்க.?
No comments:
Post a Comment