Thursday, February 8, 2024

வரி பகிர்வு காரணிகளில் மறுவரையறை செய்யப்பட்டால் ?

வரி பகிர்வில் Vertical devolutionல் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிற 41 சதவீதம் என்பதை குறைந்தபட்சம் 50 சதவீதம் அல்லது அதற்கு மேலாக உயர்த்துவதும், divisible poolல் Cess,Surcharge உட்பட பல்வேறு காரணங்களுக்காக பிடிக்கப்படும் வருவாயை பகிர்வதன் மூலமாகவும் மாநிலங்களுக்கான நிதி விடுவிப்பை தாராளப்படுத்தலாம்.

Horizontal devolutionல் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பகிர்வின் காரணிகளை மறுவரையறை செய்வதன் மூலமாகவும் மாநிலங்களின் வருவாயில் நிலைத்தன்மையை உருவாக்கலாம். இதில் Income Distanceக்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு அதிகபட்சமாக 45 சதவீதமாக உள்ளது. Income Distance அதிகமாக உள்ள மாநிலத்திற்கு அதிகளவிலான நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் பீகார், உபி போன்ற மாநிலங்கள் அதிக வரி பகிர்வையும், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த வரி பகிர்வையும் பெறுகிறது. இவ்வாறு குறைந்த அளவிலான வரி பகிர்வானது மாநிலத்திற்குள்ளான சமமான வளர்ச்சியை கேள்விக்குள்ளாகிறது.



எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டின் திருவள்ளுரில் தனிநபர் வருமானம் 3.84L உள்ளது. ஆனால் பெரம்பலூரின் தனிநபர் வருமானம் 89 ஆயிரம் ரூபாய் தான். சமஅளவிலான வளர்ச்சியை மாநிலங்களுக்கு இடையில் உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள், மாநிலத்திற்குள் உள்ள மாவட்டங்களிடையே ஏற்படுவதும் அவசியத் தேவையாக உள்ளது.

எனவே Horizontal devolutionல்
Income Distance, Demograpic performance உள்ளிட்ட காரணிகளை மறுவரையறை செய்வதுடன், Tax Effort காரணியை மையமாக கொண்டு வழங்கப்படும் நிதி பகிர்வின் அளவை அதிகப்படுத்துவது மூலம் அனைத்து மாநிலங்களின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி நோக்கி நகர வழி வகுக்கலாம். இது மாநிலங்களின் நிதி போதாமையை வெகுவாக குறைக்கவும் உதவும்.


மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த GST Compensation 2022 ஜுன் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் GST cess 2026 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டதுடன் வசூலிக்கப்பட்டும் வருகிறது. அவ்வாறு வசூல் செய்யப்படுகிற cess வரியில் மாநிலங்களுக்கு எந்தவித பகிர்வும் இல்லாமல் இருக்கிறது. 2016-17 மாநில மொத்த வருவாயையும் அதன்பிறகான வருடாந்திர வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு வழங்கப்பட்டு வந்த 14% GST இழப்பீட்டு தொகையை, குறைந்தபட்சமாக 6-8% என்ற அளவிலாவது நிர்ணயித்து 2026 வரை மாநிலங்களுக்கு வழங்கப்படுவதன் வாயிலாக மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை ஓரளவேனும் சரிசெய்வதற்கான வாய்ப்பு உருவாகும். இதனால் இந்திய ஒன்றியத்திற்காக 'நிதிக்குழுவால்' பரிந்துரைக்கப்பட்ட 34% பகிர்வு தொகைக்கு இழப்புகள் ஏற்பட வாய்ப்பு குறைவு.

இவற்றுடன் உத்திரபிரதேச மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டும், நிர்வாக காரணங்களுக்காவும் அந்த மாநிலத்தை 2 அல்லது 3 புதிய மாநிலங்களாக உருவாக்குவதன் மூலமாகவும் வரி பகிர்வு உள்ளிட்ட பொருளாதாரம், சமூக, அரசியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யவும் வாய்ப்பு உருவாகும்.

No comments:

Post a Comment