2007ல் நடந்த 2ஜி அலைகற்றை ஏலத்தில் இந்திய ஒன்றியத்தில் மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு மண்டலங்களில் 18 மண்டலங்களுக்கு மட்டும் ஏலம் விடப்பட்டது. 4 மண்டலங்களில் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. 22 மண்டலங்களிலும் சேர்த்து ஏலத்தொகையாக எதிர்பார்த்தது 40 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் 18 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் எடுத்த ஏலத்தொகை மதிப்பு 9407 கோடி ரூபாய் தான். அரசு எதிர்பார்க்கப்பட்ட தொகையை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 30593 கோடி ரூபாய் குறைவான ஏலத்தொகையே கிடைத்தது.. அதற்கான காரணங்களும் பல இருந்தன. ஆனால் தலைமை தணிக்கைத்துறை எதிர்பார்க்கப்பட்ட தொகையையும் சேர்த்து அரசுக்கு உத்தேச வருமான இழப்பாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என அறிக்கை கொடுத்திருந்தது. அதனால் நடந்த வழக்கும் அதன் விவரங்களும் நாடறிந்தது.
இதேபோன்று 3ஜி அலைகற்றையிலும் எதிர்பார்க்கப்பட்ட ஏலத்தொகையாக 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் ஏலம் போன தொகை 67 ஆயிரத்து 719 கோடியாகும்.
4ஜி ஏலத்தில் அரசு தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட தொகயானது 40ஆயிரம் கோடி ரூபாய் . ஆனால் ஏலம் போன தொகை 77 ஆயிரத்து 814 கோடி ரூபாய்.
தற்போது நடைபெற்ற 5ஜி அலைகற்றை ஏலத்தில் அரசு எதிர்பார்த்த உத்தேச தொகை 4.3 லட்சம் கோடிகள். ஆனால் ஏலம் எடுக்கப்பட்ட தொகை 1லட்சத்து 50ஆயிரத்து 173 கோடி ரூபாய் மட்டுமே. எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட 2லட்சத்து 79 ஆயிரத்து 827 கோடி ரூபாய் குறைவு.
2ஜி அலைக்கற்றை ஏலத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட ஏலத்தொகையில் 30 ஆயிரத்து 593 கோடி ரூபாய் குறைவாக ஏலம் போனதற்கு , அதைவிட கிட்டதட்ட 4 மடங்கு அதிகமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பீட்டு கணக்கை அந்த காலகட்டத்திலேயே சமர்பித்த தலைமை தணிக்கை துறை, 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 4 மடங்கு வருவாய் இழப்பீடு என இந்தியாவே கேட்டிடாத ஒரு தொகையை கணக்காக தற்போது சமர்பித்தால் என்னவாகும் ? என்பதை யோசித்தாலே தலை சுற்றுகிறது !!
2ஜி ஏலத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட தொகை அந்த காலகட்டத்தில் மிக அதிகமானது. ஆனால் பெருந்தொகை எதிர்பார்க்கப்பட்டதன் காரணம், அப்போது தனியார் நிறுவனங்களின் போட்டிகள் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் அதீத வளர்ச்சி. அதன்பிறகான 3ஜி மற்றும் 4ஜி அலைகற்றையிலும் இந்த நிலை தொடரத்தான் செய்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் அதைப்பற்றி பெரிதாய் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் 3ஜி மற்றும் 4ஜி க்கு எதிர்பார்க்கப்பட்ட தொகையே மிக மிக குறைவானது. குறைவான எதிர்பார்ப்பு தொகையை கூறி அதிகமான ஏலத்தொகையை பெற்றதால் அதுகுறித்தான சர்ச்சைகளுக்கும் , விமர்சனங்களுக்கும் வாய்ப்பில்லாமல் போனது. 2ஜி முதல் 5ஜி வரையிலான தொலைத்தொடர்பு வளர்ச்சி இந்தியாவில் உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு அபரிவிதமானது. ஜியோவின் வருகைக்கு பின் தொலைத்தொடர்பில் போட்டிகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஆனால் போட்டிக்கான சூழலும், களமும் மிக அதிகமாகவே இருக்கிறது. அதனை அரசு பயன்படுத்தி கொள்ளாததே தற்போது தொலைத்தொடர்பு துறை மூலமாக பெரும் பொருளாதார வருவாய் இழப்பின் காரணம்.
இத்தனை தனியார் நிறுவனங்களின் ஏல பங்களிப்பில் பெற்ற குறும் ஏலத்தொகைக்கு பதிலாக, BSNLக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் மூலம் 5ஜி அலைகற்றை ஏலத்தை முழுமையாக BSNLயிடம் கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்திருக்கும் பட்சத்தில் தற்போதைய 5ஜி ஏலத்தொகையை விட 13 ஆயிரத்து 287 கோடி ரூபாய் அதிகமாக பெற்றிருக்கலாம். மேலும் BSNLஐ வளர்ச்சி பாதைக்கும், தொலைத்தொடர்பு சேவைகளை மக்களுக்கு ஜியோவை விட மிக குறைந்த விலையிலும் வழங்கியிருக்கலாம். மேலும் BSNL இவ்வளவு பெரிய தொகையுடன் போட்டியிட்டிருந்தால் ஏலத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் இன்னும் அதிக தொகைக்கு ஏலம் கேட்டிருப்பார்கள். அதன்காரணமாக ஏலத்தொகை எதிர்பார்க்கப்பட்டதை விட பலமடங்கு அதிகமாக உயர்ந்திருக்கும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அரசுக்கு ஆபத்பாந்தவானாக 5ஜி இருந்திருக்கும் ....
No comments:
Post a Comment