மது இல்லாததொரு பப் என்பது எங்களின் விருப்பம்னுலாம் சொல்ல முடியாது. பப்ங்குறது குடிக்கவும் , அரட்டை அடிக்கவும் உருவானது தான்.
அப்படி உங்க விருப்பமா அது இருந்தா அதை ஏன் பொது சமூக கட்டமைப்பில் உள்ள ஒரு இடத்துக்குள்ள கொண்டு வரனும் ? பப் என்பது சமூகத்தின் மையப்புள்ளி. பொதுவாக மேலை நாட்டு கலாச்சாரம் தான் என்றாலும், அது சமூக கட்டமைப்பில் இருக்கும் இடம் ரொம்ப Sensitiveவானது. அங்க தப்பு நடக்கலனு சொல்ல வரல, எங்கதான் தப்பு நடக்கலனு தான் கேட்குறன் ? தப்பு நடந்தா சட்டப்படி தண்டிச்சு விட வேண்டி தான் அதுல எந்த மாற்று கருத்தும் இல்ல.
19ம் நூற்றாண்டுல உலக நாடுகள்ல பரவலாக இருந்த ஒரு பொழுதுபோக்கும் இடம் தான் பப். வாரஇறுதி நாட்களில் பொதுவான ஓர் இடத்தில் மக்கள் கூடி தங்களின் ஓய்வு நேரத்தை செலவிட்டனர். இதை கிட்டத்தட்ட (Common Home) சத்திரம்னு சொல்லிக்கிட்டாங்க. யார் வேண்டுமானலும் வரலாம், போகலாம், மது அருந்தலாம், கூடி பேசலாம், அரட்டை அடிக்கலாம் . இதுதான் பின்னால பப்'ங்குற (Public home - Pub) கலாச்சாரமா உருவெடுக்க காரணமா இருந்தது. முதல்ல செல்வ வளமிக்கோர் வந்து ஓய்வு நேரங்களை கழிக்கும் பொழுதுபோக்கு கட்டடங்களாக இருந்த பப்கள், தொழில்துறை வளர்ச்சிக்கு பின்னர், கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்தவர்கள் கூடி பேசவும், பொழுதை கழிக்கவும் வாரமொருமுறை சந்திக்குற டீ கடை Spotஅ மாறுனுச்சு(மது தான் பிரதானம், மது மட்டும் தான் பிரதானம்). பொது சமூக கட்டமைப்பில் இயங்குற நிகழ்வோ, தொழிலோ அது சார்ந்த தொழில்முறை வளர்ச்சியை அடையுறப்போ, அது அடுத்த கட்டத்தையும், புதுமையையும் நோக்கி நகரும். நகர்ந்து தான் ஆகனும். அப்படி தான் பப் அதோட புதுமைகளையும் புதுவித கலாச்சாரத்தையும் நோக்கி நகர்ந்தது. மது குடிப்பதற்கும் Meet பண்ணி Fun பண்ட்றதுக்கு மட்டுமே உருவான பப்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பிம்பத்தை கலை,அழகு சார்ந்த பொழுதுபோக்குகள் , அரசியல், தொழில்முனைவு ஆலோசனை கூடங்களாகவும், பல்வேறு தரப்பட்ட மக்கள் சந்திச்சு அவர்களோட எண்ணங்களை பிரதிபலிக்கவும் அப்படி பிரதிபலிக்கப்பட்டவையை ஏற்கவும், அப்படி இல்லை என மறுதலிக்கப்பட்டு உதறி தள்ளவும்
இருந்த பொது சமூகத்திற்கான களமாகவும் மாறின பப்கள். கிராமங்கள்ல கூடுற தின்னை, வேப்பமர நிழல், டீ கடை படித்துறை , பம்படி, கோயில் குட்டிச்சுவரு மாதிரி நகரங்களில் உள்ள தியேட்டர், Mall, பார்க், சந்தை,இங்கயும் டீ கடை பிரதானம், கண்காட்சிகள் போன்றதொரு இடம் தான் பப்'பும்...,
பப்களை, நாம் தியேட்டருக்கு போய் படம் பாக்குற மாதிரியான இடமாக வச்சிருக்கு ஒரு கூட்டம். நான் வாரத்துக்கு 2 படத்துக்கு போவன், நீங்க 7 படத்துக்கு கூட போகலாம் அது உங்க விருப்பம் , வசதி சார்ந்தது. அதுபோல தான் இப்போ பப்'பும். சமூக நீரோட்டத்தில் வளர்ந்து வரும் நவீன கலாச்சாரங்களை புறந்தள்ளுவதும் , அவற்றை குறுகிய வட்டத்திற்குள் அடைப்பதென்பதும் நாகரீக,சமூக வளர்ச்சிக்கான ஓர் SpeedBreaker தான்.
வடை தின்னா கொலஸ்ட்ரால் குறைய மாட்டுது, அதுனால வடை இல்லாத டீ கடைக்கு வண்டிய உட்றானு சொல்ட்றதும், அதுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குற குரூப்பு ஆமாப்பா சொல்ட்றதும் நடக்கத்தான் செய்யும். ஏன் அந்த டீ கடையோட வருமானம் கூட நல்லா இருக்கலாம். ஆனா ஒண்ணு புரிஞ்சுக்கனும் டீ கடைகள், வெறும் கடை மட்டும் இல்லங்க. அது பொதுச்சமூகம் சந்திக்குற ஒரு களம். அந்தக்களம் தான் மனுசங்களை பொதுசமூகத்திற்கு ஏற்ற மாதிரியான, எல்லா உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க கூடியதாகவும், Atleast புரிஞ்சிக்குற மனநிலைக்கும் தயார்படுத்தி வந்திருக்கு.
வடை இல்லாத டீ கடை குறுகிய வட்டம்ங்க, அங்க வர கொஞ்ச பேரால புதியதொரு தொழில்முனைவுக்கான வளர்ச்சி இருக்கலாம், சமூக வளர்ச்சிக்கு வித்திடாது. எல்லாம் இப்படி யோசிச்சா தொழில் பண்ட்றாய்ங்க இப்ப மட்டும் தூக்கினு வந்துட்டனு கேட்கலாம், என்ன பண்ட்றது இப்படி விளக்குற அளவுக்கு எனக்கு இப்போதான அறிவு வந்திருக்கு. வேணும்னா முட்டைய சைவத்துல சேர்த்த மாதிரி பப்'புக்கு பதில் டூப்'னு வச்சுக்கோங்க. அந்தப் பேர் ஒரு கட்டமைப்பை வச்சிருக்கு. அதை உடைச்சிட கூடாது அவ்ளோதான்.
(பி.கு : ஆங் அப்பறம் இன்னொன்னு மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு)
No comments:
Post a Comment